தமிழகத்தில் ஆஸி. எம்.எல்.ஏக்கள் - பாரம்பரிய நடனமாடி மகிழ்ச்சி

x

நீலகிரி வந்துள்ள மேற்கு ஆஸ்திரேலிய சட்டமன்ற உறுப்பினர்கள் படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர். இந்திய கலாசாரத்தை தெரிந்து கொள்ளவும், இங்குள்ள கல்வித்தரம் குறித்து அறிந்து கொள்ளவும், மேற்கு ஆஸ்திரேலியா சட்டமன்ற சபாநாயகர் மிட்ச்சேலி ராபட்ஸ், மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சிலர் நீலகிரி வந்துள்ளனர். ஒன்னதலை கிராமத்திற்குச் சென்ற அவர்களுக்கு படுகரின மக்கள் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர். பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்கள், படுகர் இன மக்களின் உடை அணிந்து உற்சாகமாக நடனமாடினர்


Next Story

மேலும் செய்திகள்