ஆஸி. ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்..சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்?
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச்சும் கிரீஸ் வீரர் சிட்ஸிபாஸும் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.
மெல்போர்னில் இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி தொடங்க உள்ளது. இதுவரை 21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஜோகோவிச், 22வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று நடாலின் சாதனையை சமன் செய்ய இன்று முனைப்பு காட்டக்கூடும். அதே சமயம், முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை ருசிக்க இளம் வீரர் சிட்ஸிபாஸும் போராடக்கூடும். இதனால் இறுதிப் போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story