"விழுப்புரத்தில் கலவரம் ஏற்படுத்த முயற்சி" விசிக எம்.எல்.ஏ. பரபரப்பு பேட்டி
கோலியனூர் அருகே, மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோயிலில், பட்டியியல் சமூக மக்களை வழிபட அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர்கள் ரவிக்குமார் மற்றும் சிந்தனை செல்வன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் பழனியை நேரில் சந்தித்து பேசினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், கோவிலுக்கு வழிபட வருபவர்களிடம் பாகுபாடு காட்டக்கூடாது எனவும், கோவிலை இந்து அறநிலையத்துறை தனது பொறுப்பில் எடுத்து, அனைத்து சமூகத்தினரும் வழிபடுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன், ஒரு தரப்புக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
Next Story