மீனவர்களை கடுமையாக தாக்கி.. லட்சக்கணக்கில் பொருட்கள் கொள்ளை - இலங்கை கடற்படையினர் அட்டூழியம்
- காரைக்கால் அருகே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர், 10 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்ளை அடித்துச் சென்றனர்.
- காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 11 மீனவர்கள், அஞ்சப்பன் என்பவருக்குச் சொந்தமான படகில், கடந்த 24-ஆம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.
- நேற்றிரவு தென்கிழக்கு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை கண்மூடித்தனமாகத் தாக்கி, அவர்களிடம் இருந்த வாக்கி டாக்கி, வெள்ளிச் சங்கிலி, திசைகாட்டும் கருவி, செல்போன்கள் ஆகியவற்றையும், 5 லட்ச ரூபாய் மதிப்பிலான மீன்களையும் கொள்ளை அடித்துச் சென்றனர்.
- அத்துடன் மீனவர்கள் 7 பேரை அவர்கள் கடலில் தள்ளிவிட்டுச் சென்றனர். சுமார் 2 மணி நேரம் கடலில் தத்தளித்த மீனவர்கள் பின்னர் கடுமையான முயற்சிக்குப் பிறகு படகில் ஏறி, இன்று காலை கரைக்குத் திரும்பி, காரைக்கால் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றனர்.
- இந்த பிரச்னையில், மத்திய அரசு தலையிட்டு உரிய தீர்வு அளிக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story