கஞ்சா போதையில் மூவர் மீது தாக்குதல்...கத்தியால் தலையில் வெட்டிய பயங்கரம்

x

24 மணி நேரமும் கஞ்சா மயக்கத்துலயே இருக்க ஒரு கிஸ்ஸா பாயிஸ் கேங்க்,பொதுமக்கள தாக்குறது , பணம் பறிக்குறதுனு அட்ராசிட்டி பண்ணிட்டு வந்துருக்கு... நீவேணா சண்டைக்கு வாடான்னு போலீஸ்கிட்டயே வம்பிழுத்த அந்த புள்ளிங்கோக்களுக்கு என்ன நடந்துச்சு தெரியுமா..? தலையில் பலத்த காயங்களுடன் அடுத்தடுத்து இரண்டு பேர் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். நிற்காமல் தலையிலிருந்து ரத்தம் வடிவதை பார்க்கும்போது அவர்கள் எதோ விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று எண்ண தோன்றும்... ஆனால் அது உண்மையில்லை. இந்த காயத்திற்கெல்லாம் காரணம் இவர்தான்…ஏற்கனவே மூன்றுபேரை தாக்கிய இந்த இளைஞர் , கொலைவெறி அடங்காமல் மீண்டும் அவர்களை தாக்குவதற்கு மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்… அங்கு ஏற்கனவே தயாராக இருந்த காவல்துறையினர் போதையில் தள்ளாடி வந்தவரை கையும் களவுமாக மடக்கிப்பிடித்திருக்கிறார்கள். அவரிடம் நடத்திய விசாரணையில்தான் போதையை போட்டுவிட்டு இந்த இளைஞர் பொதுமக்களை தாக்குவதை வாடிக்கையாக வைத்திருந்தது தெரியவந்துள்ளது. கெத்துக்காட்டுவதாக நினைத்து போலீஸிடம் எகுறும் இவர் ஜெப்ரின். சுனாமி காலணியைச் சேர்ந்தவர். ஜெப்ரினுக்கும் அவரது நண்பர்களுக்கும் போதை பொருள் விற்பது , கஞ்சா குடிப்பது, பொதுமக்களை தாக்கி பணம் பறிப்பதுதான் முழுநேர வேலை. ஜெப்ரினும் அவரது கேங்கும் எப்போதெல்லாம் போதை போடுகிறார்களோ அப்போது வாலென்டிரியாக வம்பிழுத்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வந்திருக்கிறார்கள். அப்படி யாரையாவது தாக்கினால் மட்டும்தான் இந்த போதை ஆசாமிகளுக்கு போதை தலைக்கு ஏறுமாம்…

மேலும் ஏரியாவில் ரவுடியாக வளர்ந்துவரும் இவர்கள் தங்களை யாராவது எதிர்த்து கேள்விகேட்டாலோ , போலீஸிடம் தகவல் கொடுத்தாலோ அவர்களை கொடூரமாக தாக்கி கொலை மிரட்டல்விடுத்து வந்திருக்கிறார்கள். இப்படிதான் சம்பவத்தன்று வழக்கம்போல் ஜெப்ரின் மற்றும் அவரது கூட்டாளிகள் நிதானம் இல்லாத அளவிற்கு கஞ்சா அடித்திருக்கிறார்கள். அப்போது ஆக்னல் என்ற இளைஞருக்கும் ஜெப்ரினுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைக்கலப்பாக மாறியிருக்கிறது. கோபத்தில் வெறிப்பிடித்த மிருகமாய் மாறிய ஜெப்ரின் கையிலிருந்த கத்தியால் ஆக்னல் தலையில் வெட்டியிருக்கிறார். பிறகு மற்றொரு நண்பருடன் பைக்கில் கிளம்பி சென்றிருக்கிறார். அப்போது ஹைகிறவுன்ட் பகுதியை சேர்ந்த மோகன் தாஸ் என்பவரும் பைக் ஓட்டி வந்திருக்கிறார். இருவரின் பைக்கும் லேசாக உரசியிருக்கிறது. ஜெப்ரினும் அவரது நண்பரும் கீழே விழுந்திருக்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த ஜெப்ரின் மோகந்தாஸை அரிவாளால் வெட்டியிருக்கிறார். படுகாயமடைந்த மோகன்தாஸை மீட்ட பொதுமக்கள் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்திருக்கிறார்கள். அங்கு ஏற்கனவே ஜெப்ரினால் தாக்கப்பட்ட ஆக்னலும் சிகிச்சைகாக சேர்ந்திருக்கிறார்.

இதை தெரிந்துகொண்ட ஜெப்ரின் ஆக்னல் மீதிருந்த கோவத்தில் மீண்டும் அவரை தாக்குவதற்காக மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். அப்போதுதான் காவல்துறையினர் வாலென்டிரியாக வந்து சிக்கிய ஜெப்ரினை மடக்கிபிடித்திருக்கிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக ஜெப்ரினையும் அவரது நண்பரையும் கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்