நீர் பிடிப்பு நிலத்தை வீட்டு மனைகளாக மாற்ற முடிவு... தடுத்த ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல்

x

திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூரில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை தாக்கிய நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவராக மணிமேகலை ஆனந்தகுமார் உள்ளார். அதே பகுதியை சேர்ந்த மகேந்திரன் மகன்களான சின்னத்தம்பி மற்றும் கர்ணன் ஆகிய இருவரும் ஆத்து மேடு பகுதியில் சுமார் 2.5 ஏக்கர் அளவிலான நீர் பிடிப்பு பகுதியில் உள்ள நிலத்தை வீட்டு மனை போட அங்கீகாரம் கேட்டுள்ளனர். இதற்கு ஊராட்சி மன்ற தலைவரின் மணிமேகலை மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த சின்னத்தம்பி மற்றும் கர்ணன் இருவரும் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரான ஆனந்தகுமாரை சரமாரியாக தாக்கினர். இதனால் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பெரும் சலசலப்பு காணப்பட்டது. இது குறித்து கத்திலி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Next Story

மேலும் செய்திகள்