"பா.ஜ.க. முன்னாள் நிர்வாகி மீது தாக்குதல்" "எம்.எல்.ஏ. மீது பரபரப்பு புகார்"
தென்காசி சிந்தாமணியை சேர்ந்த ராஜ்குமார் என்ற பாஜக முன்னாள் நிர்வாகியை சங்கரன்கோவில் தொகுதி எம்எல்ஏ ராஜா தாக்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞரான ராஜ்குமார் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் 2 முறை போட்டியிட்டு தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிந்தாமணியில் நடைபெற்ற கோயில் கொடை விழாவில் பங்கேற்ற எம்எல்ஏ ராஜாவுக்கும் ராஜ்குமாருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும், பின்னர் எம்எல்ஏ ராஜா, ராஜ்குமாரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளதாக ராஜ்குமாரின் மனைவி கோபிகா தெரிவித்துள்ளார்.
Next Story