சொத்து தகராறில் முதியவர் கொலை... தள்ளி விட்டுக் கொலை செய்த மருமகன்...
நைட்டு நல்லா பேசிட்டு தூங்க போனவரு காலையில கத்தி குத்து காயங்களோட பிணமா கிடந்திருக்காரு. மகள், மருமகன், சொத்து தகராறுனு விரியுது அந்த வழக்கோட விசாரணை.
வேலூர் மாவட்டம் லத்தேரியில் உள்ள கலைஞர் நகர் பகுதி, அன்று நடந்த அந்த பயங்கரத்தால் குலை நடுங்கி கிடந்தது.
இரவில் குடித்துவிட்டு ரகளை செய்த ஒரு முதியவர் காலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்திருக்கிறார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் சடலத்தை தீவிரமாக சோதித்துக் கொண்டிருந்தனர், அப்போது அந்த முதியவரின் காதகருகே பலத்த வெட்டுக்காயம் இருந்தது கண்டு பிடிக்கபட்டிருக்கிறது.
சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்த போலீசார் சடலத்தை கைபற்றி பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு விசாரனையை தொடங்கி இருக்கிறார்கள்.
இறந்து போனவர் இதே வீட்டில் வசித்து வந்த செல்வம். 60 வயதான இவருக்கு ஊருக்குள் எதிரிகள் என்று சொல்லிக் கொள்ளும்படி யாரும் இல்லை.
இதனால் செல்வத்தை யார் கொலை செய்திருப்பார்கள் என விசாரித்த போது தான். அவரது மருமகன் பிரபாகரன் மாமனாரின் மரணத்தின் போது நடந்ததை செய்தியாளர்களிடம் விளாவாரியாக விளக்கிக்கொன்டிருந்தார்.
சம்பவம் நடந்த அன்று இரவு செல்வம் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்ததாகவும் , அதன் பிறகு மர்மமான முறையில் இறந்து கிடந்ததாகவும் நடந்ததை புட்டுப்புட்டு வைத்துதிருக்கிறார் பிரபாகரன்.
அவரது தெளிவான பேச்சு அவர் சொல்வதில் துளியும் பொய் இல்லை என்பதை காட்டி இருக்கிறது.ஆனால் அவர் முழு உண்மையையும் சொல்லவில்லை என்பதை அவரது கண்ணே காட்டிக் கொடுத்திருக்கிறது.
இதனால் போலீசாரின் சந்தேகப் பார்வை பிரபாகரனின் பக்கம் திரும்பவே, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து துருவி துருவி விசாரித்திருக்கிறார்கள்.அப்போது தான் சொந்த மாமனாரை மருமகனே கொலை செய்துவிட்டு நாடகமாடி இருப்பது தெரிய வந்திருக்கிறது.
கூலி வேலை செய்து வந்த செல்வத்திற்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர் . அதில் ஜெயலட்சுமி என்ற பெண்ணை அதே ஊரைச் சேர்ந்த பிரபாகரனுக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறார் செல்வம். திருமணமான அன்றிலிருந்து இன்று வரை மகள் மருமகனோடு, செல்வம் ஒரே வீட்டில் வசித்து வந்திருக்கிறார்.
ஆனால் சில நாட்களாக செல்வத்தின் குடிப்பழக்கம் அவரது குடும்பத்தில் குழப்பத்தை உண்டு பண்ணியிருக்கிறது. தினசரி இரவில் குடித்து விட்டு வந்து மகளிடமும் மருமகனிடமும் வம்பிழுப்பது செல்வத்தின் வழக்கம் என சொல்லபடுகிறது.
இவ்வளவு தொல்லை செய்தும் செல்வத்தை அவரது மருமகன் தனது வீட்டிலேயே வைத்திருக்கிறார் என்றால் அதற்கு பின்னால் தான் பிரபாகரனின் லாபக கணக்கு இருந்திருக்கிறது.
4 அண்ணன் தம்பிகளோடு பிறந்த செல்வத்திற்கு பரம்பரை சொத்தாக ஏக்கர் கணக்கில் நிலம் இருக்கிறது. அதில் 74 சென்ட் நிலம் செல்வத்திற்கு மட்டும் சொந்மான பங்கு.
மற்ற சகோதரர்கள் எல்லாம் தங்கள் பங்கு நிலங்களில் விவசாயம் செய்து வரும் நிலையில் செல்வம் மட்டும் தனது பங்கு நிலத்தை தரிசாகப் போட்டுவிட்டு , கூலி வேலைக்குச் சென்று வந்திருக்கிறார்.
இதனால் அப்பாவின் சொத்தில் மகளுக்கு இருக்கும் பங்கை தனது பெயருக்கு மாற்றிக் கொடுக்குமாறு பிரபாகரன் நச்சரித்து வந்திருக்கிறார் .
ஆனால் செல்வம் அதற்கு துளியும் சம்மதிக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தான் சம்பவம் நடந்த அன்று செல்வத்தின் நிலத்தில் விவசாயம் செய்ய போவதாக சொல்லி கால்வாய் அமைத்திருக்கிறார் பிரபாகரன் .
இதனால் ஆத்திரமடைந்த செல்வம் , இரவில் குடித்து விட்டு வந்து பிரபாகரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது சண்டை முற்றியதில் செல்வத்தை பிரபாகரன் கீழே தள்ளி விட்டிருக்கிறார்.
ஏற்கனவே போதையில் தள்ளாடிக் கொண்டி இருந்த செல்வத்தின் தலை கல்லில் மோதியதால் பேச்சு மூச்சு இல்லாம் கிடந்திருக்கிறார். போதையில் தான் கிடக்கிறார் என நினைத்த பிரபாகரன், வீட்டின் கதவை சாத்திவிட்டு தூங்கி இருக்கிறார்.
இந்த நிலையில் தான் காலையில் செல்வம் குருதி வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். அப்போது இரவு நடந்த சண்டை குறித்து பிரபாகரனிடம் விசாரித்திருக்கிறார்கள். ஆனால் அவர் தள்ளி விட்டதில் தான் செல்வம் இறந்தார் என்ற உண்மையை மட்டும் சென்ஸார் செய்து விட்டு எதுவும் தெரியாதது போல கதை சொல்லி இருக்கிறார் பிராபாகரன்.
உண்மை ஒரு போது உறங்காது என்று சொல்வதைப் போல போலீசாரின் கிடுக்குப் பிடி விசாரனையில் பிரபாகரனின் நாடகம் அனைத்தும் அம்பலமாகி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் பிரபாகரனை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.