நிதி நிறுவனத்தில் துப்பாக்கி முனையில்... கொள்ளைராஜஸ்தானில் பரபரப்பு

x

ராஜஸ்தானில் பிரபல நிதி நிறுவனத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டி 23 கிலோ தங்கம் மற்றும் 10 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உதய்பூரில் செயல்பட்டு வரும் பிரபல நிதி நிறுவனம் தங்க நகைக்கடன் கொடுத்து வருகிறது. இந்த நிலையில் நிதி நிறுவனத்திற்குள் நுழைந்த 5 பேர் கொண்ட கும்பல், ஊழியர்களை துப்பாக்கி காட்டி மிரட்டியதுடன், அங்கிருந்த 23 கிலோ நகை மற்றும் 10 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து நிதி நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்