யார் கெத்து என்ற போட்டியில் ஏற்பட்ட மோதல்... பிரபல ரவுடி டாஸ்மாக்கில் குத்தி கொலை...

x

பிரபல ரவுடி டாஸ்மாக்குல கொடூரமா குத்தி கொல்லப்பட்டிருக்காரு. யார் கெத்து என்ற போட்டி உயிர் பறித்த கதை இது


ஈரோடு மாவட்டம், கனிராவுத்தர்குளம் பகுதி…

அங்கிருந்த டாஸ்மாக் கடை முன்பு குவிந்த போலீசார்… சம்பவ இடத்தை தீவிரமாக அலசி ஆராய்ந்து கொண்டிருந்தனர்....

டாஸ்மாக்கிற்குள் சரக்கடிக்க வந்த மதுப்பிரியர்களை வெளியே அனுப்பிவிட்டு காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்…

பலருக்கு உயிர் பயத்தை காட்டி அலறவிட்ட பிரபல ரவுடி… டாஸ்மாக் வாசலில் வைத்து கொடூரமாக குத்திக் கொல்லப்பட்டிருக்கிறார்.வயிற்றில் வெட்டுக் காயங்களுடன் கிடந்தவரை மீட்ட போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடியிருக்கிறார்கள்.

அப்போதுதான் இரண்டு நபர்கள் குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில், ரவுடியை கொன்றதாக சரணடைந்திருக்கிறார்கள்.

அங்கிருந்து விசாரணை வேகமெடுத்திருக்கிறது.


கொல்லப்பட்டவர் சம்திங் சந்தோஷ். வீரப்பன்சத்திரம் ஜான்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர். திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். சந்தோஷ் ஒரு முழுநேர ரவுடி. சுற்று வட்டார காவல் நிலையங்களில் சந்தோஷ் மீது கொலை முயற்சி மற்றும் வழிப்பறி போன்ற வழக்குகள் உள்ளன.

சந்தோஷின் நண்பர் முகமது அலி ஜின்னா. இருவரும் ஒன்றாக கஞ்சா விற்பனை செய்து வந்திருக்கிறார்கள்.

என்னதான் இருவரும் நண்பர்கள் என்றாலும் தொழிலில் அவர்களுக்குள் கடும் போட்டி இருந்திருக்கிறது.ஒருவர் மற்றி ஒருவர் போலீசில் போட்டு கொடுத்து தங்கள் பகையை வளர்த்து வந்திருக்கிறார்கள்.

இதனால் ஒன்றாக தொழில் செய்து வந்த நண்பர்கள் இருவரும் ஒருகட்டத்தில் எதிரிகளாக மாறியிருக்கிறார்கள்.பார்க்கும் இடங்களிலெல்லாம் ஜின்னாவும் சந்தேஷூம் மோதிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் கருவறுக்க நாள் பார்த்து வந்திருக்கிறார்கள்.

சம்பவம் நடந்த அன்று மதியம் 3 மணியளவில் சந்தோஷ் கனிராவுத்தர் குளம் பகுதியிலுள்ள டாஸ்மாக்கிற்கு மதுகுடிக்க சென்றிருக்கிறார். அதே டாஸ்மாக்கிற்கு முகமது அலி ஜின்னாவும் அவரது கூட்டாளிகளும் மது அறுதியிருக்கிறார்கள்.

தனியே மாட்டிக் கொண்ட சந்தோஷை நோட்டமிட்ட முகமது அலி ஜின்னா… தன்னுடைய கெத்தை காட்டுவதற்காக சந்தோஷிடம் சென்று வம்பிழுத்திருக்கிறார்.இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றி கைக்கலப்பாக மாறியிருக்கிறது. அதில் ஜின்னா சந்தோஷின் வயிற்றில் கத்தியால் குத்தியிருக்கிறார்…

கத்தி குத்து ஆழமாக பதிந்ததால் சந்தோஷ் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடித்து இறந்துபோயிருக்கிறார்.இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவுச் செய்த போலீசார் நீதிமன்றத்தில் சரணடைந்த மணிகண்டன் மற்றும் முகமது அலி ஜின்னாவை கைதுச் செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்