மல்யுத்த வீரர்களின் குற்றச்சாட்டு விவகாரம்- உதவிச் செயலாளர் சஸ்பெண்ட்
மல்யுத்த வீரர்களின் குற்றச்சாட்டு விவகாரம் தொடர்பாக, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் உதவிச் செயலாளர் வினோத் தோமர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷ் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுகளும், தோமர் மீது நிதி முறைகேடும் மல்யுத்த வீரர்களால் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரிக்க, விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் சரியான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக, அதன் உதவி செயலாளர் வினோத் தோமரை சஸ்பெண்ட் செய்ய மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
கண்காணிப்புக் குழு முறையாக நியமிக்கும் வரை, உடனடியாக அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்துமாறும் மல்யுத்த கூட்டமைப்புக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், கோண்டாவில் நடைபெற்று வரும் ஓபன் தரவரிசைப் போட்டியை ரத்து செய்து, பங்கேற்பாளர்களிடம் வசூலிக்கப்பட்ட கட்டணத்தைத் திருப்பித் தருமாறு உத்தரவிட்டுள்ளது.