மாஸ்கோவை நோக்கி 'கொலைகார குழு' - சரண் (அ) சாவு - புதின் ஆவேசம் - ரஷ்யாவில் உச்சக்கட்ட பதற்றம்
உக்ரைன் போரில் முக்கியப் பங்கு வகிக்கும் ரஷ்யாவின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழு ரஷ்யாவுக்கு எதிராகவே திரும்பி உள்ளது. வாக்னர் குழுவின் தலைவரான ப்ரிகோஸ் ரஷ்ய ராணுவ தலைமையை கவிழ்ப்பதாக உறுதியேற்றார். தங்கள் குழுவில் 25 ஆயிரம் பேர் இருப்பதாகவும், சாவதற்குத் தயாராக இருப்பதாகவு அவர் பரபரப்பு கருத்துக்களை முன்வைத்தார். மேலும், ரஷ்யாவின் தெற்கே உள்ள ரோஸ்டோவ் பகுதிக்குள் தங்கள் படைகள் நுழைந்து விட்டதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில், வாக்னர் ஆயுதக்குழு கிளர்ச்சியில் ஈடுபடுவது முதுகில் குத்தும் செயல் எனவும், இதற்காக மிகக் கடுமையான தண்டனை விதிக்கப்பட உள்ளதாகவும் ரஷ்ய அதிபர் புதின் எச்சரித்துள்ளார். மாஸ்கோவில் தீவிரவாத தடுப்பு நிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கிளர்ச்சியைத் தூண்டிய வாக்னர் தலைவர் மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும், அவரைப் பின்பற்றாமல் வாக்னர் குழுவினர் ரஷ்ய ராணுவத்திடம் சரண்டையுமாறும் புதின் கேட்டுக் கொண்டார்.