பிரிட்ஜ்-க்குள் இருந்த கணவன், மாமியார்.. வீட்டுக்குள் கள்ளக்காதலனுடன் உல்லாசம் - அம்பலமான மனைவியின் அந்தரங்க ஆட்டம்
- டெல்லியில் இளம்பெண் ஷ்ரத்தா, அவரது காதலன் அப்தாப்பால் கொலை செய்யப்பட்டு, உடல் வெட்டப்பட்டு காட்டில் வீசப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.
- இதனையடுத்து இதுபோன்ற பயங்கர சம்பவங்கள் வெளியாவது தொடர் கதையாகி வருகிறது.
- அந்த வகையில் அசாமில் கணவன், மாமியாரை கொலை செய்து, உடலை துண்டாக்கி காட்டில் வீசிய பெண் சிக்கியிருக்கிறார்.
- கவுகாத்தி, நோன்மத்தி பகுதியை சேர்ந்த இளம்பெண் வந்தனா... கடந்த செப்டம்பர் மாதம் தனது கணவரையும் மாமியாரையும் காணவில்லை என போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்.
- அவரது புகாரை அப்படியே நம்பிய போலீசார் விசாரணையை தொடங்கி எந்த துப்பும் கிடைக்காது, விசாரணை நகராமல் திணறியிருக்கின்றனர்.
- ஆனால் வந்தனாவிடம் எந்த கவலையும் இல்லாதது உறவினர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனை போலீசாரிடமும் தெரிவித்திருக்கிறார்கள்.
- அவர்களது சந்தேகப் பார்வையும் வந்தனா மீது விழ, போலீசுக்கு போக்கு காட்டவே போலியாக கணவரை காணவில்லை என்ற புகாரை கொடுத்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.
- வசமாக சிக்கிய வந்தனாவை பிடித்து போலீசார் தங்கள் பாணியில் கிடுக்குப்பிடி விசாராணையை மேற்கொள்ள உண்மையை எல்லாம் ஒவ்வொன்றாக கக்கியிருக்கிறார்.
- கணவர் அமர்ஜோதி டே மற்றும் மாமியார் சங்கரி டேவை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.
- கொலை செய்யப்பட்டவர்கள் உடலை துண்டு துண்டாக வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்ததாகவும் திடுக்கிடும் தகவலை தெரிவித்திருக்கிறார்.
- மூன்று நாட்கள் வீட்டிலேயே வைத்திருந்த உடல் பாகங்களை எல்லாம் பிளாஸ்டிக் கவரில் வைத்து, கவுகாத்தியிலிருந்து சிரபுஞ்சி கொண்டு சென்று வீசியதாகவும் கூறியிருக்கிறார்.
- இதையெல்லாம் தனது கள்ளக்காதலன் மற்றும் நண்பருடன் இணைந்து அரங்கேற்றியதாகவும் தெரிவிக்கிறார்.
- இதையெல்லாம் கேட்ட போலீசார் அதிர்ந்திருக்கிறார்கள்.
- கணவனையும், மாமியரையும் தீர்த்துக்கட்டிவிட்டு, கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த வந்தனாவை கைது செய்துள்ளனர்.
- கள்ளக்காதலன் மற்றும் அவரது நண்பரையும் போலீசார் கம்பி எண்ண வைத்துள்ளனர்.
- திருமணம் செய்த கணவனையும், மாமியாரையும் பெண் கொன்று வெட்டி வீசிய சம்பவம் ஷரத்தா வழக்குபோல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Next Story