ஆசியக் கோப்பை டேபிள் டென்னிஸ் தொடர் - வெண்கலம் வென்ற மனிகா பத்ரா | Asia Cup 2022

x

ஆசியக் கோப்பை டேபிள் டென்னிஸ் தொடரில் இந்திய வீராங்கனை மனிகா பத்ரா வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்து உள்ளார். பாங்காக்கில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்த மனிகா பத்ரா, வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஹினா ஹயட்டா உடன் மோதினார். இதில் 4க்கு 2 என்ற கேம் கணக்கில் மனிகா பத்ரா வெற்றிவாகை சூடி, வெண்கலப் பதக்கத்தை முத்தமிட்டார். ஆசியக் கோப்பை தொடரில் வெண்கலம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் மனிகா பத்ரா பெற்று உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்