மத்திய அமைச்சரின் சகோதரர் மரணம்; 2 அரசு மருத்துவர்கள் அதிரடி சஸ்பெண்ட் - ஐசியுவில் நேர்ந்த அவலம்..!

x

பீகாரில், மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சவுபேவின் சகோதர‌ர் நிர்மல் சவுபே மாரடைப்பால் உயிரிழந்த விவகாரத்தில், 2 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

பீகார் மாநிலம் பகல்பூரில் வசித்து வரும் நிர்மல் சவுபேவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு, சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

ஆனால், அங்கு மருத்துவர்கள் இல்லாத நிலையில், நிர்மல் சுவுபே உயிரிழந்தார். தகவலறிந்து உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்தனர்.

மருத்துவமனையின் அலட்சியத்தால் அவர் உயிரிழந்த‌தாக குற்றம் சாட்டினர். இதனிடையே, 2 மருத்துவர்களை பணி இடைநீக்கம் செய்துள்ள மருத்துவமனை நிர்வாகம், விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.

அதே நேரத்தில், வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்