பூதாகரமாக வெடித்த அருணாச்சல பிரதேச பேப்பர் லீக் விவகாரம் : போராட்டத்தில் இறங்கிய மக்கள் -போலீசார் தடியடி

x
  • அருணாச்சலப் பிரதேசத்தில் தேர்வாணையத் தேர்வுத்தாள் லீக் ஆன விவகாரத்தில், போராட்டக்கார‌ர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
  • அருணாச்சலப் பிரதேச மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில், பேப்பர் லீக் விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இந்நிலையில், தேர்வாணையத்தின் தலைவராக, சாந்தனு தயால் என்ற 61 வயதான ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தலைவர் பதிவிக்கு 62 வயதே உச்சபட்சம் என்பதால், ஓராண்டுக்குள் ஓய்வு பெற உள்ளவர் நியமிக்கப்பட்டதற்கு எதிராக 12 மணி நேர போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
  • இதனால் தலைநகர் இடாநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில், ஏராளமான இளைஞர்களும் பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • பாதுகாப்புப் படைக்கும், போராட்டக்கார‌ர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, மோதல் வெடித்த‌து.
  • இதனால், கண்ணீர் புகைக்குண்டு வீசியும், தடியடி நடத்தியும் போலீசார் விரட்டி அடித்தனர். இதில், பாதுகாப்புப் படையினர் உட்பட 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
  • போராட்டம் காரணமாக இடாநகரில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதிவியேற்பு விழாவை அரசு ரத்து செய்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்