#BREAKING || ஆருத்ரா மோசடி வழக்கு.. வில்லன் நடிகர் RK சுரேஷ்-க்கு ஷாக் கொடுத்த போலீஸ்..

x

ஆருத்ரா வழக்கு விவரங்களை பொருளாதார குற்றங்களை விசாரிக்கும் மத்திய விசாரணை அமைப்புகள் முகாந்திரம் உள்ளதா என விசாரிக்கிறது.

கார்ப்ரேட் விவகார அமைச்சகம் விசாரணை பிரிவு முதலில் விசாரணை துவக்கம்

குற்றவாளிகளிடம் பணம் அதிகமாக இருப்பதால் அவர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக தப்பி சென்றுவிடுவதால் கைது செய்வதில் சவால்

நடிகர் ஆர் கே சுரேஷ் வழக்கறிஞர்கள் மூலம் தரும் விளக்கங்களை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் ஏற்க மறுப்பு

விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி பொருளாதார குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது

இரண்டு மாத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தீவிரம்

சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்ட் டிரேடிங் பிரைவேட் நிறுவனத்தில் அதிக லாபம் தருவதாக பொதுமக்களை ஏமாற்றி பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஆருத்ரா நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, விருதுநகர், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் அரியலூர் ஆகிய ஊர்களில் 37 இடங்களில் ஆருத்ரா நிறுவனத்திற்கு சம்பந்தப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும், அதன் தொடர்ச்சியாக வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு இடங்களிலும் மொத்தம் 57 இடங்களில் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

ஆருத்ரா நிறுவனத்தில் 1,09,255 பொதுமக்கள் இந்நிறுவனங்களில். 2438 கோடி ரூபாய் முதலீடுகள் செய்துள்ளதுள்ளனர்.ஆருத்ரா கோல்ட் மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களில் உரிமையாளர்களாக செயல்பட்ட 16 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அதில் இந்த மோசடி நிறுவனத்தில் தொடர்புடைய இவ்வழக்கில் 16 பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது அதில் பாஸ்கர், மோகன்பாபு, செந்தில்குமார், பட்டாபிராம், மைக்கேல்ராஜ், ஹரீஷ், பேச்சிமுத்துராஜ் என்ற ரபீக், ஐயப்பன். ரூசோ, நாகராஜ். மாலதி 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் .இதன் கிளை நிறுவனமாக 6 நிறுவனங்களை தொடங்கி மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் குறித்து ஆதாரங்களுடன் தகவல் தெரிவித்தால் அவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் நடிகரும் பாஜக நிர்வாகியுமான ஆர் கே சுரேஷ் சம்மன் அனுப்பபட்டு வழக்கு தொடர்பாக அவரது வழகறிஞர் ஆஜர் ஆகி விளக்கம் அளித்துள்ளார் விளக்கத்தில் திருப்தி அளிக்காததால் நடிகர் ஆர்.கே சுரேஷ் அவர்கள் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் பொருளாதார குற்றங்களை விசாரிக்கும் மத்திய விசாரணை பிரிவுகள் பொருளாதார குற்றப்பிரிவில் ஆருத்ரா கோல்ட் டிரேடிங் விவகாரம் தொடர்பாக வழக்கு விவரங்களை பெற்றுள்ளது. முதற் கட்டமாக கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சகம் சார்பில் சாஸ்திரி பவனில் செயல்படும் மண்டல அதிகாரிகள் கடந்த மார்ச் 24ஆம் தேதி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அடுத்த கட்டமாக அமலாக்கத்துறையினரும் வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்று வருமானவரித்துறை மற்றும் தீவிர மோசடி விசாரணை பிரிவு போன்ற விசாரணை அமைப்புகளும் வழக்கு குறித்து விவரங்களை கேட்டுள்ளது. ஒவ்வொரு விசாரணை பிரிவும் தங்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியுமா என்ற அடிப்படையில் ஆதாரங்களை திரட்டி வருகிறது.

இந்த வழக்கில் பெரும்பாலோனோர் செய்யப்பட்ட காரணத்தினால் இன்னும் இரண்டு மாதத்தில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்