இனி ஆண்-பெண் இணையாமலேயே... பிடித்த டிசைனில் ஆண்டுக்கு 30,000 குழந்தைகளை உருவாக்கம்... மிரட்டும் நியூ டெக்னலாஜி
குழந்தை பெற்றெடுக்கும் வாய்ப்பற்ற பெற்றோருக்கும், மக்கள் தொகை குறைவால் கஷ்டப்படும் நாடுகளுக்கும் வரப் பிரசாதமாக, உயிரியல் டெக்னாலஜி ஒன்று உருவாகி வருகிறது.
பெர்லினை தளமாகக் கொண்ட எக்டோ லைஃப் என்ற நிறுவனம், உலகின் முதல் செயற்கை கருப்பை முறையில், குழந்தைகளை உருவாக்கி வளர்க்கும் டெக்னாலஜியை அறிமுகப்படுத்துகிறது. இது தொடர்பாக, அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள காணொலியில் காட்டப்படும் காட்சிகள், பார்வையாளர்களை வியப்படைய செய்கின்றன. இந்த டெக்னாலஜி மூலம், ஒரு வருடத்திற்கு 30,000 குழந்தைகளை உருவாக்க முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தாயின் கருப்பை போன்று அமைந்துள்ள, இந்த செயற்கை கருப்பையில் உள்ள சென்சார்கள் மூலம், குழந்தையின் இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், சுவாச விகிதம் உள்ளிட்டவற்றை கண்காணிக்க முடியும் என தெரிகிறது. மேலும், இந்த முறையில் மிகவும் தரமான, மரபணு ரீதியாக உயர்ந்த கருக்கள் தேர்ந்தெடுத்து வளர்க்கப்படுவதுடன், குழந்தையின் தோல், முடி, கண் ஆகியவற்றின் நிறம், குழந்தையின் புத்திசாலித்தனம் உள்ளிட்டவற்றை பெற்றோரே தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும். இந்த 'செயற்கை கருப்பை முறை' குழந்தை பேறு அற்றவர்களுக்கும், புற்றுநோய் உள்ளிட்ட காரணங்களால் கருப்பை நீக்கிய பெண்களுக்கும் வரப்பிரசாதமாக அமையும் என சொல்லப்படுகிறது.