கள்ளக்குறிச்சி கலவரத்தில் கைதானவர்கள்... ஒரே நேரத்தில் நீதிமன்றத்தில் திரண்டதால் பரபரப்பு

x

கள்ளக்குறிச்சி கலவரத்தில் கைதாகி ஜாமினில் வெளியே வந்தவர்கள் நீதிமன்றத்தில் கையெழுத்திட ஒரே நேரத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் நடந்த வன்முறையில் 371 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 120 பேர் ஜாமினில் வெளியே வந்த நிலையில் அவர்கள் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் தினமும் 2 வேளை கையெழுத்திட உத்தரவிடப்பட்டது. இதன்படி ஒரே நேரத்தில் கையெழுத்திட நீதிமன்றம் முன்பாக ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்