பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு கைது வாரண்ட்

x

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி இஸ்லாமாபாத்தில் நடந்த பிடிஐ கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய இம்ரான் காண், மாவட்ட பெண் நீதிபதி ஜெபா சவுத்திரியை மிரட்டும் தோணியில் பேசியிருந்தார். அதே நேரத்தில் வரம்பு மீறி பேசிவிட்டதாக, அவர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். எனினும், பெண் நீதிபதி ஒருவருக்கு எதிராக பேசியுள்ளதால், இம்ரான் காணுக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து இஸ்லாமாபாத் மேஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்