இயக்குநரும் நடிகையுமான ஏக்தா கபூருக்கு கைது வாரண்ட்- பீகார் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

இணையதள தொடரில் ராணுவ வீர‌ர்களை அவமதித்த‌தாக நடிகை ஏக்தா கபூருக்கு(Ekta Kapoor) பீகார் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்தி நடிகையும், இயக்குநருமான ஏக்தா கபூர், கடந்த 2020ஆம் ஆண்டு, டிரிபிள் எக்ஸ்(XXX) என்ற இணையதள தொடரை தயாரித்து, தனது ஓடிடி(OTT) தளத்தில் வெளியிட்டார். இந்த தொடரில் ராணுவ வீர‌ர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இடம் பெற்றதாக சர்ச்சை எழுந்த‌து. இந்நிலையில், ஏக்தா கபூர் மற்றும் அவரது தாயார் ஷோபா கபூருக்கு(Shobha Kapoor) எதிராக பீகார் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்