செந்தில் பாலாஜி கைது.. "எதை வேணாலும் ஏற்கலாம் ஆனால்.." மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

x

தமிழகத்தில் உள்ள ஆட்சி எந்தளவு ஊழல் செய்கிறது என்பதை நாடு முழுவதும் அறியும் என, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் மேற்கு தாம்பரத்தில் உள்ள சண்முகம் சாலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழகத்தில் உள்ள ஆட்சி எந்தளவு ஊழல் செய்கிறது என்பதை இந்தியா அறிந்துள்ளது என்றார். ஒரே ஒரு முறை பாஜகவை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்றும், ஊழலற்ற ஆட்சியை பாஜக தரும் என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். பாஐக ஆட்சியில் ஊழல் நடந்தால் இருக்கும் இடம் அரசு கட்டில் அல்ல, சிறைச்சாலை என, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளதாகவும் எப்போதும் உரிய அங்கீகாரத்தை அளிப்போம் என்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மறைந்த அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீது மரியாதையை வைத்துள்ளதாகவும், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதாக தற்போது கூறும் முதல்வர் ஸ்டாலின், அதிமுகவில் செந்தில் பாலாஜி இருந்தபோது அவரைக் கைது செய்ய வேண்டும் எனக் கூறியவர் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்