திவ்யாவை அர்ணவ் மிரட்டும் புதிய ஆடியோ வெளியீடு

x

லவ் ஜிகாத்தால் தான் ஏமாற்றப்பட்டுள்ளதாக நடிகை திவ்யா மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

நடிகர் அர்ணவ் தன்னை மிரட்டுவதாக ஆடியோ ஒன்றை நடிகை திவ்யா வெளியிட்டுள்ளார். அதில் தான் தமிழன் என்றும், தமிழ் நாட்டிலேயே வந்து உனது வேலையை காண்பிக்கிறாயா என அர்ணவ் பேசியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் அர்ணவ் தன்னை வேண்டுமென்றே திட்டமிட்டு இஸ்லாமியராக மதம் மாற்றி கர்ப்பம் அடைய செய்து, வேறோரு முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக திவ்யா மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

அர்ணவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ள திவ்யா, தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும்எந்த ஒரு ஆதரவுமின்றி நிற்பதாகவும் மாநில மகளிர் ஆணையத்திற்கு அளித்துள்ள புகாரில் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்