வாட்ஸ் அப்பில் வந்த போன் கால்... பரிசு பொருள் வந்திருப்பதாக ஆசை வார்த்தை - நம்பி பணம் கொடுத்தவர்களுக்கு விபூதி அடித்த கும்பல்
- அரியலூர் மாவட்டம் கடுகூர் கிராமத்தை சேர்ந்தவர் விமல்ராஜ். இவரது தாய் ஜெயந்தி போனுக்கு வாட்ஸ் அப்பில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்துள்ளது.
- இங்கிலாந்தில் இருந்து பேசுவதாகவும், தன்னுடைய மகள் பிறந்தநாளை முன்னிட்டு பரிசு தொகை மற்றும் பரிசு பொருட்கள் விழுந்துள்ளதாக கூறி ஆங்கிலத்தில் பேசி இருக்கிறார்கள்.
- அந்த பரிசு பொருட்கள் விமான நிலையத்தில் உள்ளது என்றும், இதற்காக பணத்தை கட்டி பெற்றுக் கொள்ளுங்கள் என கூறவே அவர்களும் அதை நம்பி 12 லட்ச ரூபாய் வரை பணத்தை கட்டியதாக தெரிகிறது.
- விமல்ராஜின் தந்தைக்கு தொண்டை புற்றுநோய் உள்ள போதிலும் பரிசு தொகை கிடைக்கும் என நம்பி பணத்தை கொடுத்திருக்கிறார்கள்.
- ஆனால் கடந்த 5 மாதங்களாக பரிசு பொருட்கள் வராததால் அதிர்ச்சியடைந்த அவர்கள், இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தனர்.
- இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story