பணியாற்றிய வீட்டிலே திருட்டு பயிரை மேய்ந்த வேலி.. காட்டிக்கொடுத்த சிசிடிவி - வசமாக சிக்கிய பணிப்பெண்
அரியலூர் அருகே வீட்டில் திருட்டில் ஈடுபட்டு வந்த பணிப்பெண்ணை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் புதிய மார்கெட் தெருவை சேர்ந்த அன்புவேல் - சோபியா தம்பதி. இவர்களது வீட்டில் வசந்தி என்பவர் வீட்டு வேலை செய்து வருகிறார்.
வசந்தி வீட்டில் நகைகளை திருடியது, சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வசந்தியிடம் இருந்து 7 சவரன் நகைகளை மீட்டு, அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story