கம்பத்தை கதறவிடும் அரிக்கொம்பன் யானை - அரசு பரபரப்பு தகவல்

x

அரிக்கொம்பன் காட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க, பல துறைகளுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக இயக்குநர் தலைமையில் ஒரு குழுஅமைக்கப்பட்டு, யானையை வனப்பகுதிக்குள் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் மேகமலை புலிகள் காப்பக உள்ளூர் யானை கண்காணிப்பாளர்கள் உள்பட 16 யானைத்தட கண்காணிப்புக் காவலர்கள், ரேடியோ காலர் பொருத்தப்பட்ட அந்த யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து "சுயம்பு" மற்றும் "முத்து", முதுமலையில் இருந்து "உதயன்" ஆகிய 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன என்றும் கம்பம் நகராட்சியில் 144 தடை உத்தரவு மூலம் சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்படுவதாகவும், தேனி மாவட்ட ஆட்சியர் நிலையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்