ஒரே இடத்தில் வலம்வரும் அரிக்கொம்பன் யானை - தீவிர கண்காணிப்பில் வனத்துறையினர்
கேரள மாநிலம் மூணாறு பகுதியில், 18 பேரை கொன்ற அரிக்கொம்பன் யானை, உச்ச நீதிமன்ற உத்தரவுபடி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு, பின்னர் வனப்பகுதியில் விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வனப்பகுதியில் இருந்து வெளியேறிய அரிக்கொம்பன் யானை, கம்பம் நகர் பகுதியில் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது. தொடர்ந்து, மேகமலை அடிவாரத்தில் உள்ள சுருளிப்பட்டி கிராமத்திற்கு சென்று, அங்கிருந்து நகர்ந்து சண்முகா நதி அணைப் பகுதிக்கு சென்றுள்ளது. இந்த சூழலில், கடந்த இரண்டு நாட்களாக சண்முகா நதி அணைக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் வலம்வரும் அரிக்கொம்பன் யானையை, வனத்துறையினர் மற்றும் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
Next Story