"அரசை தொடர்ந்து விமர்சிக்க நான் ஒன்றும் எதிர்க்கட்சித் தலைவர் இல்லை" - ஆளுநர் அதிரடி...
அரசை தொடர்ந்து விமர்சிக்க தான் ஒன்றும் எதிர்க்கட்சித் தலைவர் அல்ல என்று கேரள ஆளுநர் ஆரிப் முகமது தெரிவித்துள்ளார்.
கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் கவர்னர் ஆரிப் முகமதுவுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வந்தது.
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம், ஆளுநரின் புத்தாண்டு அழைப்பு புறக்கணிப்பு உள்ளிட்ட நிகழ்வுகளின் மூலம் இந்த மோதல்கள் உச்சத்தை தொட்டது.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபையில், அரசு தயாரித்த உரையை ஆளுநர் ஆரிப் முகமது எந்த வித மாற்றமும் இன்றி அப்படியே வாசித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிவளித்த ஆளுநர் ஆரிப் முகமது, தொடர்ந்து அரசை தொடர்ந்து விமர்சிப்பதற்கு தான் ஒன்றும் எதிர்க்கட்சித் தலைவர் இல்லை" என்று தெரிவித்தார்.
Next Story