பேருந்தை நிறுத்த வாக்குவாதம்,அடிதடி... கைகலப்பில் தனியார், அரசு பேருந்து ஊழியர்கள் | Thanthi TV
கேரள மாநிலம் வயநாடு மானந்தவாடியில் அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. பேருந்து நிலையத்தில் பேருந்து நிறுத்தும் இடத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தச் சென்ற போது, தனியார் பேருந்து ஓட்டுநர் தான் ஓட்டி வந்த பேருந்தை குறுக்கே நிறுத்தியதால் 2 பேருந்துகளும் இடித்துக் கொண்டன. இதனால் 2 பேருந்து ஊழியர்களுக்கும் வாக்குவாதமாகி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். காவல்துறையினர் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் தனியார் பேருந்து ஓட்டுநர் வேண்டுமென்றே பேருந்தை அங்கு நிறுத்தியது தெரிய வந்தது.
Next Story