நிலத்தகராறில் நடந்த வாக்குவாதம்... அண்ணன்களை கத்தியால் குத்திய தம்பி - வேலூரில் பரபரப்பு
அணைக்கட்டு அருகே உள்ள மராட்டியபாளையம் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவருக்கும், அவரது அண்ணன்களான தட்சிணாமூர்த்தி மற்றும் சுந்தரமூர்த்தி ஆகியோருக்கும் இடையே, பூர்வீக சொத்து சம்பந்தமான வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்துள்ளது. ஊர் பெரியவர்கள் வழக்கை வாபஸ் பெற்று, நிலத்தை 3 பேரும் சரிசமமாக பிரித்துக் கொள்ளுமாறு கூற, சரவணனும் வழக்கை வாபஸ் பெற்றுள்ளார். பின்னர், தட்சிணாமூர்த்தி ஏற்கனவே பயன்படுத்தி வந்த நிலத்தில் உழுது கொண்டிருந்தபோது, அங்கு சென்ற சரவணன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த சரவணன் தட்சிணாமூர்த்தியை கல்லால் தாக்கியதுடன், தடுக்க வந்த சுந்தரமூர்த்தியையும், மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சரவணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.