மாவட்ட தி.மு.க கூட்டத்தில் வாக்குவாதம் - இருதரப்பினரிடையே தள்ளு முள்ளு

x

பட்டுக்கோட்டையில் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் தஞ்சை தொகுதி எம்பி பழனிமாணிக்கம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய பேராவூரணி தொகுதி எம்எல்ஏ அசோக்குமார் கட்சி தொண்டர்கள் கிளை கழக நிர்வாகிகள் எந்த பலனும் அடையவில்லை என்று குற்றம் சாட்டியதாகவும் , இதை கண்டித்து ஒரு தரப்பினர் சத்தம் போடவும், மறுதரப்பினர் எம் எல் ஏ வின் பேச்சுக்கு ஆதரவாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கூட்டம் முழுமையாக நடைபெறாமல் முடிவுற்றது.


Next Story

மேலும் செய்திகள்