சிறையில் நடந்த தகராறு... ஆற்றங்கரையில் கிடந்த சடலம்..! விசாரணையில் வெளியான பகீர் பின்னணி...
சிறையில் நடந்த தகராறு... ஆற்றங்கரையில் கிடந்த சடலம்..! விசாரணையில் வெளியான பகீர் பின்னணி...
சிறையில் கஞ்சா பயன்படுத்தியதை அதிகாரிகளிடம் தெரிவித்த இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 2 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்த அஜித்குமார், திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், கை, கால்கள் கட்டப்பட்டவாறு, உடலில் வெட்டு காயங்களுடன் நொய்யல் ஆற்றங்கரையில் அஜித்குமார் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, வல்லரசு, கணேசன் மற்றும் ஷாஜகான் ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறையில் இருந்த போது கஞ்சா பயன்படுத்தியதை அதிகாரிகளிடம் தெரிவித்ததால், 3 பேரும் சிறையில் இருந்து வெளியே வந்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, 3 பேரையும் மீண்டும் கோவை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.