மதுபோதையில் ஏற்பட்ட தகராறு...நண்பன் கையால் நடந்த கொடூரம் - தென்காசியில் பரபரப்பு
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே, மது போதையில் நடந்த வாக்குவாதத்தின்போது, இளைஞர் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
வாசுதேவநல்லூர் அருகே தேவிபட்டினத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவர், தனது நண்பரான செல்வகுமாருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். போதை தலைக்கேறியதில், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த செல்வகுமார், தன் கையில் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியதில், சிவக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலின் பேரில் வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன், கொலையைாளி செல்வகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story