அதிமுக - திமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் - தூத்துக்குடி அவசர கூட்டத்தில் பரபரப்பு

x

தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் அதிமுக கவுன்சிலருக்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சலசலப்பு உருவானது. கூட்டத்திற்கு கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுக கவுன்சிலர் மந்திர மூர்த்தி, பல்வேறு விவகாரங்களில் தமிழக அரசைக் கண்டித்து பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக கவுன்சிலர்கள், அவரை வெளியேறுமாறு கூச்சலிட்டனர். இதனையடுத்து, அதிமுக கவுன்சிலர் மந்திர மூர்த்தி வெளியேறியபோது, அவருக்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்