சொன்னதை செய்த ஏரியா MLA.. பாலில் குளிப்பாட்டிய ஊர் மக்கள்" - நீங்க போதும்னு சொல்லவே கூடாது"
ஆந்திராவில் சாலை வசதி செய்து கொடுத்த சட்டமன்ற உறுப்பினரை, அலங்கரிக்கப்பட்ட குதிரை வண்டியில் சொந்த ஊருக்கு வரவழைத்து கிராம மக்கள் பால் அபிஷேகம் செய்தனர்..
ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மணியம் மாவட்டத்தில் உள்ள பி.சக்கரபள்ளி கிராமத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி இல்லாமல் உள்ளது. இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு அந்த ஊருக்கு சட்டமன்ற உறுப்பினர் அழகங்கி ஜோகராவ் சாலை வசதி செய்து கொடுத்துள்ளார். இதனால் சட்டமன்ற உறுப்பினரை தங்களது ஊருக்கு அலங்கரிக்கப்பட்ட குதிரை வண்டியில் மேளதாளங்கள் முழங்க வரவழைத்து ஊர் நடுவில் மேடை அமைத்து பொதுமக்கள் பாலாபிஷேகம் செய்தனர்.
Next Story