'நீங்க Rugged Boy-ஆ..?'.. 'Chocolate Boy-ஆ..?' - கேம்பிரிட்ஜில் டிப்டாப்பாக என்ட்ரி கொடுத்த ராகுல்

x

பாரத் ஜடோ யாத்திரை முழுவதும் shave செய்யாமல் ராகுல் காந்தி தாடி வளர்த்து வந்தது எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு ஆளாகியிருந்தது.

இந்நிலையில், தற்போது ட்ரிம் (Trim) செய்யப்பட்ட தாடியுடனும், முடி திருத்தம் செய்யப்பட்ட ஹேர் ஸ்டைலுடனும் ஸ்டைலாக காட்சி தரும் ராகுலின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பெரும்பாலும் வெள்ளை டி-சர்ட்டுடன் காட்சியளித்து வந்த ராகுல் காந்தி, இந்த புகைப்படங்களில் டிப்டாப்பாக கோட் சூட் அணிந்துள்ளார்.

பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் 21 நூற்றாண்டு குறித்து நடந்த நிகழ்ச்சியில் ராகுல் சிறப்புரையாற்றிய போது, இந்த புகைப்படங்கள் எடுப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்