தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா?..உங்களுக்கு தான் இந்த எச்சரிக்கை! -இன்று முதல் அடுத்த 3 நாளுக்குள்..

x

தீபாவளி பண்டிகையை ஒட்டி, ரயிலில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்கப்பட உள்ளது. இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில்... வெளியூரில் பணிபுரியும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்வது வழக்கம். இதனால் அந்த சமயத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் கட்டுக்கடங்காமல் காணப்படும்.

இதனை தவிர்க்க முன்கூட்டியே டிக்கெட் புக் செய்ய விரும்பும் மக்கள்... ரயில் போக்குவரத்தை தேர்ந்தெடுப்பது வாடிக்கை.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

பொதுவாக கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ரயிலில் 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு தொடங்கிவிடும்.

அந்த வகையில், தீபாவளிக்கான ரயில் முன்பதிவு எப்போது தொடங்கும் என்று மக்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில், தீபாவளி பண்டிகையை ஒட்டி ரயிலில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கப்பட உள்ளது.

டிக்கெட் கவுண்ட்டர்கள் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை புக் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

ஆனால் இன்று புக் செய்பவர்கள் நவம்பர் 9ம் தேதிக்கு மட்டுமே முன் பதிவு செய்ய முடியும். அதே சமயம் நாளை முன்பதிவு செய்தால் 10ம் தேதி பயணம் செய்ய முடியும்.

வரும் 14ம் தேதி முன் பதிவு செய்வதென்றால் நவம்பர் 11ம் தேதிக்கான டிக்கெட்டுகளை மட்டுமே முன் பதிவு செய்ய முடியும்.

பலரும் தீபாவளிக்கு முதல் நாள் அதாவது நவம்பர் 11ம் தேதி பயணம் செய்ய விரும்புவார்கள் என்பதால் வரும் 14ம் தேதி முன் பதிவு செய்ய பலரும் முண்டியடிக்கக்கூடும்.

இம்முறை தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை அன்று வருவதால் அதற்கு முந்தைய வியாழக்கிழமையில் இருந்தே பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்