திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க போறீங்களா? தேவஸ்தானம் சொன்ன குட்நியூஸ்
திருப்பதி ஏழுமலையான் கோவில் வைகுண்ட ஏகாதேசி சொர்க்கவாசல் திறப்பு, ஜனவரி இரண்டாம் தேதி அதிகாலை 12 மணி அளவில் திறக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட், ஏற்கனவே ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இலவச தரிசனத்திற்கான டோக்கன்கள் கீழ் திருப்பதியில் 9 இடங்களில் 92 கவுண்டர்கள் அமைக்கப்பட்டு, நாளை மதியம் முதல் தொடர்ந்து வழங்கப்பட உள்ளது. நாள் ஒன்றுக்கு 45 ஆயிரம் டோக்கன்கள் வீதம் 10 நாட்களுக்கு 4 லட்சத்து 50 ஆயிரம் டோக்கன்கள் தொடர்ந்து வழங்கப்பட உள்ளது. இதனை உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் தனது ஆதார் கார்டுகளை காண்பித்து டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
Next Story