முதல் தலைமுறை பட்டதாரியா நீங்கள்?.."அடித்தது ஜாக் பாட்.." அதிகாரிகளுக்கு உத்தரவு - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு

x

அரசு பணிகளில், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை கொடுப்பது தொடர்பான வழிகாட்டு நெறி முறைகளை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.... அது பற்றி விளக்குகிறது இந்த தொகுப்பு...

முதல் தலைமுறை பட்டதாரிகள், கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், அரசு பணியிடங்களில் முன்னுரிமை வழங்குவதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது...!

ஓராண்டுக்கும் மேலாக, இது தொடர்பான கோரிக்கைகள் எழுந்து, அடங்கிய நிலையில் அரசு தற்போது நடவடிக்கை எடுத்திருக்கிறது.

தமிழக அரசின் மனிதவள மேலாண்மைத்துறை கடந்த 2021ம் ஆண்டு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பில், அரசு பணியிடங்களில் ஏற்கெனவே பின்பற்றப்பட்டு வரும் முன்னுரிமை முறையினை மறுசீரமைப்பு செய்வதாக கூறி, சில திருத்தங்களை செய்தனர்.

அதில், கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் தமிழக அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்றவர் களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப் பட்டிருந்தது.

ஆனால் இது தொடர்பான சான்றிதழ்களை பெருவதில், தெளிவான நடைமுறைகள் இல்லாமல் இருந்தது. குறிப்பாக முதல் தலைமுறை பட்டதாரிகள் தங்கள் சான்றிதழை பெற சிக்கலை ஏற்படுத்தியது.

இ- சேவை மையம் தொடங்கி, வருவாய்த்துறை வரை பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியதாக இருந்தது. இதனால் அரசுத்துறையில் பல்வேறு பணிகளுக்கு வேலை வாய்ப்பகம் மூலம் பரிந்துரை செய்த விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதிவிட்டு காத்திருக்க வேண்டிய நிலைக்கு சென்றனர்.

அரசு இது தொடர்பான தெளிவான நடைமுறைகளை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. மேலும், இணையம் வழியாகவே விண்ணபிக்கவும் வழி செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.

தற்போது அரசு அதை ஏற்று , முதல் தலைமுறை பட்டதாரிகள் சான்றிதழ் பெருவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை நீக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது தொடர்பான இணைய தொகுப்பையும் மேம்படுத்தவும் கூறியுள்ளனர்.

மேலும் வருவாய்த்துறையினையும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த ஆணையில் குறிப்பிட பட்டுள்ளது. அரசு பணியிடங்கள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு, மக்கள் தங்களது வரவேற்பை தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்