சிக்கன் தந்தூரி சாப்பிட்ட மாணவன் பலி - ஹோட்டல் மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை

x

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிக்கன் தந்தூரி சாப்பிட்டு மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் மாணவர் உண்ட உணவகத்தை தற்காலிகமாக மூட மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆரணி பகுதியில் உணவகத்தில் சிக்கன் தந்தூரி உண்ட 12 ஆம் வகுப்பு மாணவரான திருமுருகன் உடல்நலக் கோளாறு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனையடுத்து, மாணவர் சாப்பிட்ட உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி, உணவகத்தை தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்