AR ரகுமான் மகளின் புதிய அவதாரம்.. தந்தைக்கு டஃப் கொடுக்க மகள் ரெடி -அட இதெல்லாம் இவங்க பாடுன பாட்டா?

x

ஆஸ்கார் நாயகனான தந்தை ரஹ்மான் வழியில் இசையில் ஆர்வம் கொண்ட மகள் தான், கதீஜா ரகுமான். தனது பள்ளி பருவத்தில் 13 வயதில் எந்திரன் படத்தில் இவர் பாடிய பாடலின் போர்ஷன் குறைவு தான் என்றாலும்... அதற்கு கிடைத்த வரவேற்பு மிக அதிகம். அண்மையில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் இவரது இதமான குரலில் ஒலித்த 'சின்னஞ்சிறு நிலவே' பாடல் பல இதயங்களை வருடியது தமிழ் பற்றை வெளிப்படுத்தும் தனது தந்தையின் இசையில் வெளியான 'மூப்பில்லா தமிழ் தாயே' பாடல் மூலம் ட்ரெண்டிங் வரிசையில் இடம் பிடித்தவர்... அறிவு எழுதி ஷான் ரோல்டன் இசையமைத்து வெளிவந்த சகவாசி' பாடல் மூலம் சகவாசிகளின் இதயம் கவர்ந்தவர்...

இப்படி பாடகியாக இவர் பாடிய பாடல்கள் வெகு சிலவை தான் என்றாலும்... தனி முத்திரையை பதிக்க தவறுவதில்லை கதீஜா ... இந்நிலையில், இசை புயலான தனது தந்தைக்கே டஃப் கொடுக்க ரெடியாகிவிட்டார், கதீஜா. சில்லுக் கருப்பட்டி, பூவரசம் பீப்பீ, ஏலே உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஹலிதா ஷமீமின்

'மின்மினி' படத்தின் மூலம் இசையமைப்பாளர் அவதாரம் எடுக்க இருக்கிறார், கதீஜா ரகுமான். குழந்தைகளாக இருந்து இளம் வயதினராக மாறுபவர்களின் கதை கொண்ட இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த 2015 ஆம் ஆண்டு முடிவடைந்து விட்டது. தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக குழந்தையாக நடித்தவர்கள் தற்போது வளர்ந்து இளம் வயதினரான பிறகு அடுத்த கட்ட படப்பிடிப்பு ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு தொடங்கப்பட்டிருந்தது.

இந்த படத்திற்கு இசையமைத்து கொண்டிருக்கும் கதீஜா விடம் இருந்து சிறப்பான இசை வந்து கொண்டிருப்பதாக ஹலிதா ஷமீம் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித் துள்ளார். இதன் மூலம் திரை உலகில் இசையமைப்பாளராக காலடி எடுத்து வைக்க இருக்கும் தகவலையும் அவர் உறுதிப்படுத்தி இருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்