மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பம்... அதிர்ச்சி ரிப்போர்ட் !

x

மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பம்...அதிர்ச்சி ரிப்போர்ட்

மருத்துவ படிப்பில் சேர்வதற்கு தகுதி பெற்ற மாணவர்களில், 53 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.

நீட் நுழைவுத் தேர்வுக்கான முடிவு கடந்த மாதம் ஏழாம் தேதி வெளியிடப்பட்டது.

அதில், தமிழகத்தில் இருந்து தேர்வெழுதிய ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேரில், 67 ஆயிரத்து 787 பேர் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான தகுதி மதிப்பெண்களை பெற்றிருந்தனர்.

இதையடுத்து கடந்த மாதம் 22 ஆம் தேதி முதல், கடந்த ஆறாம் தேதி வரை மருத்துவ படிப்பில் சேர்வதற்காக மாணவர்கள் விண்ணப்பித்தனர்.

இதில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22 ஆயிரத்து 643 மாணவர்களும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13 ஆயிரத்து 457 மாணவர்களும் என, 36 ஆயிரத்து 100 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

தகுதி பெற்றிருந்த மாணவர்களில் 53 விழுக்காட்டினர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.

இது கடந்த ஆண்டைவிட குறைவாகும்.



Next Story

மேலும் செய்திகள்