டாஸ்மாக் ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்.. சர்ச்சைக்கு கரூர் கலெக்டர் நீண்ட விளக்கம்

x

கரூர் குடியரசு தின நிகழ்ச்சியில், டாஸ்மாக் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கியது குறித்து, ஆட்சியர் பிரபுசங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் நீண்ட விளக்கம் கொடுத்துள்ளார்

கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைப்பெற்ற 74 வது குடியரசு தின விழா நிகழ்ச்சியில், டாஸ்மாக் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் கொடுத்த விவகாரம், சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி சர்ச்சையை கிளப்பியது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் நீண்ட விளக்கம் கொடுத்துள்ளார்.

அதில், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று சிறப்பாக பணியாற்றிய அரசுப் பணியாளர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் விருது வழங்கும் நிகழ்வு நாடு முழுவதும் நடைபெறும் நிகழ்வுகளில் ஒன்று என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், டாஸ்மாக் ஊழியர்களுக்கு விருது வழங்கப்பட்டது குறித்து, சமூக வலைதளங்களில் தவறாக சித்தரிக்கப்பட்டது வருத்தமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்