சிரிப்பு தான் சிக்கலே..அரியவகை நோய்.. மூளை நரம்பில் பாதிப்பு.. பழைய நினைவுளை இழக்கும் அபாயம் - கவலையில் நடிகை அனுஷ்கா
- சமீபகாலங்களாக அரியவகை நோய்களால் நடிகைகள் பாதிக்கப்பட்டு வருவது தொடர் கதையாகியுள்ள நிலையில், நடிகை அனுஷ்கா தானும் ஒரு புதுவிதமான நோயில் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தது ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது...
- மயோசிடிஸ் என்ற தசை சார்ந்த நோயினால் பாதிக்கப்பட்ட சமந்தா...
- நிறம் மாறும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட மம்தா மோகன் தாஸ்...
- தசைக்கூட்டு வலியுடன் நினைவாற்றல் மற்றும் மனநிலை மாற்றம் தொடர்பான ஃபைப்ரோ மயால்ஜியா வகை நோயினால் பாதிக்கப்பட்டு சிரமப்படும் பூனம் கவுர்...
- கருப்பை சம்பந்தப்பட்ட பிசிஓஎஸ் வகை நோயினால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்த நடிகை சுருதிஹாசன் .... என இந்த வரிசையில் நடிகை அனுஷ்காவும் ஒரு புதுவிதமான நோயுடன் வரிசையில் சேர்ந்திருக்கிறார்...
- இவருக்கு வந்திருக்கும் பிரச்சினை சிரிப்பு தான்.. என்னது சிரிச்சா பிரச்சினையா? என்ற கேள்வி தான் எழும். ஒரு ஜோக் சொன்னால் சிரித்து விட்டு உடனே வேலையை பார்க்க சென்றால் பரவாயில்லை.. ஆனால் விடாமல் 20 நிமிடம் சிரித்தால் என்னவாகும்? அப்படி ஒரு அவஸ்தை தான் அனுஷ்காவுக்கு...
- கர்நாடகாவில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அனுஷ்கா, தனக்கு சிரிக்கும் நோய் உள்ளதாகவும், தான் சிரிக்க ஆரம்பித்தால் அதை நிறுத்த குறைந்தது 10 முதல் 20 நிமிடங்கள் ஆகும் எனவும் தெரிவித்திருந்தார்.
- இது சில சமயம் படப்பிடிப்பை கூட நிறுத்தும் அளவுக்கு கூட சென்று விடும் என அனுஷ்கா கூறிய நிலையில், ஆரம்பத்தில் இதனை யாரும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.... ஆனால் ஒரு கட்டத்தில் இதன் தாக்கம் அனுஷ்காவை துரத்திய போது தான் விபரீதமும் தெரியவந்திருக்கிறது.
- இது குறித்து மருத்துவர்களிடம் கேட்ட போது தான் இது ஒரு அரிய வகை நோய் என்பது தெரியவந்துள்ளது...
- மூளையின் நரம்பில் ஏற்படும் ரசாயன மாற்றத்தால் ஏற்படும் இந்த அரிய வகை நோய் அலர்ஜி, வீக்கம் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படுகிறது.
- இதனால் பெரிதும் பாதிப்பில்லை என்றாலும், இந்த நோய் நூற்றில் ஒருவருக்கு கடந்த கால நினைவுகளை இழக்கச் செய்யும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
Next Story