ஒன்றுகூடும் மோடிக்கு எதிரான படைகள்.."2024 தேர்தலில் பெரிய Twist இருக்கு"
இந்தியாவில் எதிர்கட்சிகள் ஒன்றுபட்டு இருப்பதாகவும், எளிமையான கணக்கீடுகளை மேற்கொண்டால் ஒன்றுபட்ட எதிர்கட்சிகள், மோடியை எளிதாக வீழ்த்துவார்கள் என வும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வாஷிங்டனில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு இருப்பதாகவும், அவை மேலும் ஒன்றுபட்டு வருவதாகவும், தொடர்ந்து எதிர்க்கட்சிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறினார். வரும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் மக்களை ஆச்சரியப்படுத்தும் எனவும், எளிமையான கணக்கீடுகளை மேற்கொண்டால் ஒன்றுபட்ட எதிர்க்கட்சிகள், 2024 ஆம் ஆண்டு தேர்தலில் மோடியை எளிதாக வீழ்த்துவார்கள் எனவும் ராகுல் காந்தி குறிப்பிட்டார். தகுதி நீக்கம் தன்னை முழுமையாக மறு வடிவமைத்துக் கொள்ள அனுமதித்தாகவும், அது தனக்கு வழங்கப்பட்ட பரிசு எனவும் அவர் கூறினார். பாரத் ஜோடோ யாத்திரை தனது கண்களை திறந்திருப்பதாக கூறிய அவர், மத நல்லிணக்கமே இந்தியாவிற்கான ஒரே பாதை எனவும் தெரிவித்தார்.
மதச்சார்பின்மை குறித்து பேசி வரும் ராகுல் காந்தி, அவரது வயநாடு தொகுதியில் முஸ்லீம் லீக் கட்சியுடன் கூட்டு சேர்ந்தது குறித்து கேள்வி கேட்டபோது, முஸ்லீம் லீக் கட்சி, ஒரு மதச்சார்பற்ற கட்சி எனவும் அந்தக் கட்சிக்கு மதச்சார்பு கிடையாது எனவும் பதிலளித்தார்.