அரசு அலுவலர்கள் 3 பேரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு 10 மணி நேரம் சோதனை- திருவாரூரில் பரபரப்பு

x

திருவாரூரில் அரசு அலுவலர்கள் மூன்று பேரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 10 மணி நேரமாக நடத்திய சோதனை முடிவில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

விழுப்புரம் சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனராக இருப்பவர் முத்து மீனாட்சி. இவர் 2019 ஆம் ஆண்டு திருவாரூர் வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்தார். அப்போது இலவச வீட்டு மனை பட்டா வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. புகாரின் பேரில் திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி முத்துமீனாட்சி உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் திருவாரூர் ஜி.ஆர்.டி கார்டனில் உள்ள முத்துமீனாட்சியின் வீட்டில் பத்துக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இது தவிர விளமல் கிராம நிர்வாக அலுவலரான துர்காராணி, அடியக்கமங்கலம் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் கார்த்தி ஆகியோரது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். தொடர்ந்து பத்து மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில், திருவாரூரில் உள்ள விழுப்புரம் சர்க்கரை முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்