ஜல்லிக்கட்டு தீர்ப்பு வந்ததும் முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
தமிழர்தம் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது என முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அரசு நடத்திய சட்டப் போராட்டத்துக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது எனவும், அலங்காநல்லூரில் மாபெரும் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டு வரும் நிலையில், வரும் ஜனவரியில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் வெற்றி விழா கொண்டாடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story