பேஸ்புக்கில் நன்றி தெரிவித்த அண்ணாமலை

x

தமிழ்நாட்டை சேர்ந்தோருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு, மாநில பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டை சேர்ந்த பாம்பு பிடி வீரர்கள் வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன், புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர் கல்யாண சுந்தரம், ஓய்வுபெற்ற நூலகர் பாலம் கல்யாண சுந்தரம், சித்த பயிற்சியாளர் கோபால்சாமி வேலுச்சாமி ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேசிய விருதுபெற்ற பின்னணி பாடகி வாணி ஜெயராமுக்கு, பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, நாட்டின் மிக உயர்ந்த குடிமக்களுக்கான விருதுகளை வழங்கி கவுரவித்த பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு பாஜக சார்பில் நன்றி தெரிவிப்பதாக பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்