"எங்க ஆதரவு இல்லாமல் அதிமுக செயல்பட முடியாது".. "அண்ணாமலை செய்வது தான் சரி.." - பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி பரபரப்பு பேச்சு
- பாஜக ஆதரவு இல்லாமல் அதிமுகவால் செயல்பட முடியாது என பாஜகவை சேர்ந்த சி.டி.ரவி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
- தமிழகத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேச்சால் அதிமுக-பாஜக கூட்டணியில் விரிசல் அதிகரித்து செல்கிறது.
- இந்த சூழலில் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி, பாஜக ஆதரவு இல்லாமல் அதிமுகவால் செயல்பட முடியாது என பேசியிருக்கிறார்.
- சிக்கமகளூருவில் செய்தியாளரிடம் பேசிய சி.டி. ரவி, அண்ணாமலை தமிழகத்தில் சரியான பாதையில் அரசியல் செய்கிறார், தமிழகத்திற்கு அண்ணாமலை செய்யும் அரசியல்தான் சரியானது எனக் கூறியிருக்கிறார்.
- அதிமுக உடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை கூறுவது பாஜகவுக்கு வலு சேர்ப்பதாக உள்ளது எனக் கூறியிருக்கும் சி.டி.ரவி, அண்ணாமலை இதுபோன்ற கருத்துகளை கூறினால் மட்டுமே அதிமுகவினர், பாஜகவுடன் கூட்டணி வைக்க முன்வருவார்கள், ஏனென்றால் அதிமுகவால் பாஜகவின் ஆதரவு இல்லாமல் செயல்பட முடியாது எனக் கூறியிருக்கிறார்.
Next Story