செப்.26 கோவையில்... அண்ணாமலை அதிரடி அறிவிப்பு
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை கண்டித்து, வரும் 26 ஆம் தேதி அறவழிப் போராட்டம் நடைபெறும் என, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழின தாய்மார்களை இழிவுபடுத்திய ஆ.ராசாவை கண்டுகொள்ளாத காவல்துறை, ஜனநாயக ரீதியாக போராடும் பாஜகவினரை பொய் வழக்கில் கைது செய்து அச்சுறுத்துவதாக தெரிவித்துள்ளார். சில திமுக வழக்கறிஞர்கள் நீதிபதிகளையே அச்சுறுத்தி வருவதாக தெரிவித்துள்ள அண்ணாமலை, திமுகவின் பொய் வழக்கு நடவடிக்கைகளை கண்டு பாஜக அஞ்சாது என்றும் குறிப்பிட்டுள்ளார். தமிழ் சகோதரிகளை இழிவுபடுத்திய ஆ.ராசாவை கண்டித்து, வரும் 26 ஆம் தேதி பாஜக சார்பில், கோவையில் அறவழி சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
Next Story